உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம் மேயர் மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் துவக்கி வைத்தனர். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 10 March 2024

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம் மேயர் மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் துவக்கி வைத்தனர்.


 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம் மேயர் மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் துவக்கி வைத்தனர்.


திருப்பூர் மாநகராட்சி வளாகத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு  மாண்புமிகு மாநகராட்சி  மேயர் .ந.தினேஷ்குமார் , மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் இ.ஆ.ப., மாநகர காவல் துணை ஆணையர் வனிதா , கல்லூரி முதல்வர் வசந்தி ஆகியோர் தலைமையில்  திருப்பூர் குமரன் கல்லூரி மாணவியர் பங்கேற்ற, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபயண பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இப்பேரணியில் முன்னூற்றி ஐம்பதுக்கும்  மேற்பட்ட கல்லூரி மாணவியர் பங்கேற்றனர். முன்னதாக, மகளிர் தினத்தை முன்னிட்டு, மாநகராட்சி பெண் தூய்மை பணியாளர்களுக்கு மேயர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை நிறுவனர் திருமதி கவிதா ஜனார்த்தனன், உதவி ஆணையர் (மூன்றாவது மற்றும் நான்காவது மண்டலம் ) வினோத் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad