கிட்ஸ் கிளப் பள்ளி, அன்புடன் திருப்பூர் அறக்கட்டளை, திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு சார்பில் 32 வது நாளாக நீர்மோர் பந்தல்
கோடை வெயில் சென்ற வருடத்தை விட இந்த வருடம் 2024 மிக மிக அதிகமாக மக்களை வாட்டுகிறது வருடம் தோறும் கிட்ஸ் கிளப் பள்ளி, அன்புடன் திருப்பூர் அறக்கட்டளை, திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக நீர் மோர் பந்தல் அமைத்து லட்சக்கணக்கான பொதுமக்களின் தாகத்தை தீர்த்து வருகிறார்கள். அந்த வகையில் திருப்பூர் கலைஞர் பேருந்து நிலையம் முன்புறம் நீர் மோர் பந்தல் அமைத்து 32 வது நாளாக பொதுமக்கள் மற்றும் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் என அனைவரின் தாகத்தை தனித்து வருகிறார்கள் இந்த நீர் மோர் பந்தலை தினமும் கிட்ஸ் கிளப் பள்ளியின் தாளாளர் மோகன் கே. கார்த்திக் அவர்கள் பார்வையிட்டு பொது மக்களுக்கு வழங்கப்படும் நீர்மோர் தரமாக சுவையாக உள்ளதா எனவும் பொது மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து தரமான நீர் மோர் வழங்கி வருகிறார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment