திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் மகளிர் சுய உதவி குழுவின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பாராளுமன்ற பொது தேர்தல் (2024) நடைபெறுவதை முன்னிட்டு 100% அனைவரும் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிக்கண்ணா அரசு கல்லூரியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை உதவி ஆட்சியர்( பயிற்சி) செல்வி ஹிறிதியா மற்றும் எஸ் விஜயன் இ. ஆ .ப. ஆகியோர் துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி குழுமையின் திட்ட இயக்குனர் திருமதி மலர்விழி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ரஞ்சிதாதேவி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment