தாராபுரம் நகரத்திற்கு உட்பட்ட 3-வது வார்டு ஓடைத்தெரு பகுதி மக்கள் தேர்தல் நேரத்தில் தண்ணீர் பிரச்சனைக்காக புதிதாக குழாய் அமைத்துத் தருமாறு கோரிக்கை வைத்தனர், அதை தேர்தல் முடிந்ததும் இரண்டு ஒரு நாளில் நிறைவேற்றித் தருகிறோம் என்று நகர மன்ற உறுப்பினர் ஹைடெக் அன்பழகன் உறுதி அளித்திருந்தார்.
பொதுமக்களிடம் சொன்னதுபோல் அக்கோரிக்கையினை நிறைவேற்றும் விதமாக இன்று அவர்களுக்கு புதியதாக குழாய் அமைத்து தண்ணீர் வசதி செய்து கொடுத்துள்ளார். இதற்காக அப்பகுதி பொதுமக்கள் ஹைடெக் அன்பழகன் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்தனர். உடன் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சரத்குமார் அவர்கள், இளைஞர் அணி ரஞ்சித் குமார் அவர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment