தாராபுரம் அருகே நேருக்குநேர் கார் மோதி விபத்து!7பேர் காயம் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 21 April 2024

தாராபுரம் அருகே நேருக்குநேர் கார் மோதி விபத்து!7பேர் காயம்

 



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சேலத்தைச் சேர்ந்த ஏழு பேர் ஒரே காரிலும், மற்றொரு காரில் ஈரோட்டைச் சேர்ந்த மூன்று பேரும் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தரிசனம் செய்துவிட்டு தாராபுரம் வழியாக சேலம் செல்லும் வழியில் காட்டம்பட்டி என்ற இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் சொகுசு கார் மீது மோதியது. இதில் காரில் இருந்த 7பேர் காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தது, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதில் மூன்றுக்கு மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad