வேலம்பாளையத்தில்நாம் தமிழர் கட்சி சார்பில் வாக்காளர் சேவை மையம்
திருப்பூர் பாராளுமன்ற தேர்தல் அன்று 15 வேலம்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு சேவை மையம் அமைக்கப்பட்டது . இந்த சேவை மையத்தில் வாக்குச்சாவடி எண், பாகம் எண், வரிசை எண், உள்ளிட்ட சேவைகளை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி அவர்களுக்கு ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்.இந்த முகாமில் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளந்தமிழன் ஷேக், கௌரவ ஆலோசகர் பரமசிவம், மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் உஷாராணி,கீர்த்திகா,கலை இலக்கிய பண்பாட்டு பாசறை பொறுப்பாளர் அசுரகவி அகமது, மாணவர் பாசறை வினோத், தொகுதி தலைவர் திருமூர்த்தி தொகுதி துணைச் செயலாளர் சிவா, பகுதி பொறுப்பாளர் சேகர்,வெங்கடேஷ், உள்ளிட்ட பல நிர்வாகிகள் பொறுப்பேற்று வாக்காளர்களுக்கு சிறப்பான சேவையை செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment