தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு.
திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் நகரத்திற்க்கு உட்பட்ட 7வது வார்டில் ஈரோடு நாடாளுமன்ற தேர்தலின் வெற்றி வேட்பாளர் கே.இ.பிரகாஷ் அவர்களுக்கு தாராபுரம் நகர கழக செயலாளர் முருகானந்தம் அவர்கள் பொதுமக்களிடையே கழக அரசின் சாதனைகளான மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக ஒரு கோடியே 15 லட்சத்து 16 ஆயிரத்து 292 மகளிர் பெறுகிறார்கள்.
விடியல் பேருந்து பயணத் திட்டம் மூலமாக 445 கோடி முறை பயணித்து பெண்கள் பயனடைந்து இருக்கிறார்கள்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால் பயனடைந்தவர்கள் ஒரு கோடி பேர்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் 16 லட்சம் பிள்ளைகள் வயிறார உணவு உண்கிறார்கள்.
நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் 13 லட்சத்து 12 ஆயிரம் பேர்.
கூட்டுறவுக் கடன் தள்ளுபடி பெற்றவர்கள் 1 லட்சம் பேர்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் "புதுமைப் பெண்" திட்டப்படி 2 ஆண்டுகளுக்கு, 4 லட்சத்து 81 ஆயிரத்து 75 மாணவிகள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள்.
‘நான் முதல்வன்’ திட்டத்தில் 2 ஆண்டுகளில், 28 லட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளார்கள்.
‘இல்லம் தேடி கல்வித் திட்டத்தில்’ 24 லட்சத்து 86 ஆயிரம் பள்ளிப் பிள்ளைகள் பயனடைந்திருக்கிறார்கள்.
62 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் புதிய குடிநீர் இணைப்பை பெற்றுள்ளது. இது போன்ற பல கழக அரசின் சாதனைகளை நகர செயலாளர் முருகானந்தம் வீடுவீடாகச் சென்று மக்களை சந்தித்து எடுத்து கூறி வாக்கு சேகரித்தார்.. இதில் நகர் மன்ற தலைவர் கு.பாப்புப்கண்ணன் அவர்கள் மற்றும் ,கிளை செயலாளர் மகேந்திரன், மற்றும் நகர மன்ற உறுப்பினர் முகமது யூசுப், பிரதிநிதிகள் அமீர் அம்ஜா, வெங்கடேஸ்வரி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள்,இன்னாள் முன்னால் நிர்வாகிகள், இளைஞர் அணி தோழர்கள் என பலர் கலந்துக்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment