தாராபுரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்த திமுகவினர்... - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 13 April 2024

தாராபுரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்த திமுகவினர்...


 தாராபுரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்த திமுகவினர்...


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு


திமுகவின்  வேட்பாளர் கே.இ.பிரகாஷ் அவர்களுக்கு உதயசூரியன்  சின்னத்தில் ஆதரவு கேட்டு தாராபுரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மஜ்திதுர் ரஹ்மான் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கோவை மாநகர மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் சந்தித்தனர், இந்நிகழ்வில் நகர செயலாளர் முருகானந்தம் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளிடம் பேசுகையில் தேர்தல் வெள்ளிக்கிழமை அன்று வருவதால் அன்றைய தினம் இஸ்லாமிய மக்கள் காலை நேரமாக வாக்குப்பதிவு செய்யும்படியும் மற்றும் ஐந்து மற்றும் ஆறாவது வார்டு பகுதியில் எந்த ஒரு அடிப்படை தேவைகளையும் உடனடியாக செய்து தருகிறோம் என்றும் மற்றும் ஆறாவது வார்டு பகுதியில் உள்ள ராஜ வாய்க்கால் பகுதியில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதற்கு தீர்வு காணப்பட்டு உள்ளது என்றும் மற்றும் இஸ்லாமிய சமுதாய மக்கள் வாழும் பகுதியில் திமுக அரசின் சார்பில் பல நலத்திட்டங்கள் செய்துள்ளதாகவும் எனவே வருகிற பாராளுமன்றத் தேர்தலில் மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப இந்தியா கூட்டணி வேட்பாளர் பிரகாஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க அனைத்து இஸ்லாமியர்களிடம் விழிப்புணர் ஏற்படுத்தித் தருமாறும் மற்றும் ஜமாத்தின் ஆதரவை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்வில்


நகர்மன்ற தலைவர் கு. பாப்பு கண்ணன் அவர்களும்,நகர அவைத் தலைவர் பா. கதிரவன் அவர்களும் 6வது வார்டு கிளைக் கழக செயலாளர் அக்பர் பாஷா,  அயலகாணி மாவட்ட துணை தலைவர் ரஹ்மத்துல்லா அவர்கள், 5 வது வார்டு செயலாளர் தாமஸ், 5- வது வார்டு பிரதிநிதி நாசர் உசேன், ஆதிதிராவிட நலத்துறை துணை அமைப்பாளர் திரு சிவசங்கர் மற்றும் (135,136,138 பூத் பொறுப்பாளர்கள்) மௌலானா, ஜாபர் சாதிக், சையத் இப்ராஹிம், இளைஞர் அணி வீரகாளி வெங்கடேஷ் கறிக்கடை அபுபக்கர் சித்தீக்,செளகத்தலி,அப்பாஸ் அலி, முகமது தாரிக், மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad