அனைத்து இந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த உழவர் தியாகிகளுக்கு நினைவஞ்சலி
கடந்த 9-4-1978 ஆம் ஆண்டு
வேடசந்தூரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த
உழவர் தியாகிகள்
நவாலூற்று வே.நாச்சிமுத்து கவுண்டர்,
ஒட்டநாகம்பட்டி இரா.கருப்பசாமி ஆசிரியர்,
அய்யாக்கவுண்டன்
புதூர் ப.சின்னசாமிகவுண்டர்,
காசிபாளையம் வ.சுப்பிரமணி,
மண்டபம்புதூர் ப.கிருஷ்ணமூர்த்தி,
ராசாக்கவுண்டன் வலசு ப.மாணிக்கம் ஆகியோருக்கு
அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி.கே. விவசாய மணி( எ) ஜி சுப்பிரமணி அவர்கள் தலைமையில்
46-வது நினைவேந்தல் நிகழ்ச்சி
வேடசந்தூர் நினைவு ஸ்தூபியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திருப்பூர் தலைமை அலுவலகத்தில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட கார்கள், வேன்கள், சுமார் முன்னூறு இரண்டு சக்கர வாகனங்களிலும் அனைத்து மாநில, மாநகர, மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சி, வார்டு, மற்றும் உறுப்பினர்கள் பேரணியாக சென்று கலந்து கொண்டு தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்தும் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment