திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்தியா கூட்டணியின் சார்பாக போட்டியிடும், ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கே.இ.பிரகாஷ் அவர்களைஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தாராபுரத்தில் இன்று பரப்புரை செய்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் - புதுமைப்பெண் திட்டம் - மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் என நமது திராவிட மாடல் அரசு சிறப்பாக செய்து முடித்த திட்டங்களையும் நமது இந்தியா கூட்டணியின் மக்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளையும், அதே நேரம், மணிப்பூர் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் மகளிர் பாதுகாப்பையும் - மாண்பையும் பாசிச கூட்டம் சிதைத்து வருகிறது என்று எடுத்துச் சொல்லி, மதுரைக்கு 72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவந்தது அதிமுகவின் சாதனை என சொல்லிக் கொண்டு உள்ளார்கள்.
நான் அங்கு சென்று பார்த்தப்போது மிகப் பிரம்மாண்ட சுற்று சுவர் மட்டுமே இருந்தது. ஆனால் உள்ளே சென்று பார்த்தால் ஒற்றை செங்கல் மட்டும்தான் இருந்தது. அதையும் எடுத்து வந்து விட்டேன். தற்பொழுது அவர்கள் மருத்துவமனையை காணவில்லை என கடந்த 2 தினங்களாக தேடிக் கொண்டுள்ளனர் என செங்கலை எடுத்து மக்களிடம் காட்டி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார். பரப்புரை நிகழ்ச்சியில் தமிழ்நாடு செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ், மாவட்ட செயலாளர் இல்.பத்மநாபன், ஒன்றிய பெருந்தலைவர் ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார், தாராபுரம் தொகுதி பொறுப்பாளர் கோட்டை அப்பாஸ்,நகர செயலாளர் முருகானந்தம்,நகர மன்ற தலைவர் பாப்புகண்ணன், மற்றும் இந்திய கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கழகத்தின் இந்நாள் முன்னாள் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment