நீர் குட்டை ஆக்கிரமிப்பை அகற்ற போராடும் திருப்பூர் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பூலுவப்பட்டி சாலையில் அமைந்துள்ள வினாயகர் குட்டையின் நீர் வழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு புகார் மனு ஒன்று திருப்பூர் மாவட்ட நடுவர் (கலெக்டர்) அவர்களிடம் தாக்கல் செய்யப்பட்டது, சில நாட்களுக்கு முன் மீண்டும் சட்ட அறிவிப்பு கடிதம் அனுப்பப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட கிராம அலுவலர் மற்றும் நில அளவையர் அழைத்து பேசி 25/04/2024 அன்று குட்டை ஆக்கிரமிப்பை ஆய்வு செய்து நில அளவையின் மூலம் அளந்து சென்றுள்ளனர் பின்பு ஓரிரு நாட்களில் ஆய்வறிக்கையை நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர்களிடம் சமர்ப்பிப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளனர். இந்த தொடர் நடவடிக்கையால் ஒரு நீர் குட்டையின் நீர்வழிப் பாதை ஆகிரப்பிலிருந்து மீட்டெடுக்கப்படும் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment