திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டல அலுவலகத்தில் குடிநீர் இயந்திரம் பழுதடைந்து உள்ளது
தமிழ்நாட்டில் வெப்பத்தின் அளவு அதிகரித்து வெப்ப அலை வீசிக் கொண்டிருக்கும் நிலையில் பகல் பொழுது வெளியே நடமாட முடியாத நிலை உள்ளது . பொதுமக்கள் தாகம் தீர்க்க திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் அலுவலகத்தில் பொதுமக்கள் குடிநீர் அருந்துவதற்காக சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் உபயோகம் இல்லாமல் உள்ளது இந்த இயந்திரத்தில் சாதாரண குடிநீர், குளிரூட்டப்பட்ட குடிநீர், சுடுநீர் என மூன்று வகையான குடிநீர் தரும் வசதி உள்ளது இதனால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருத்தது தற்போது இது உபயோகத்தில் இல்லாமல் பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் வைத்துள்ளார்கள் உடனடியாக மக்கள் வரி பணத்தில் வாங்கி சில மாதங்கள் ஆன இந்த குடிநீர் இயந்திரத்தை சரி செய்து அதில் குறித்த குடிநீர் மக்களுக்கு தருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலத்திற்கு வரும் பொது மக்களின் கோரிக்கையாகும்.
No comments:
Post a Comment