வாழ்நாள் முழுவதும் உங்களை கோர்ட்டுக்கு அலைய விடுவேன் திருப்பூர் பாஜக வேட்பாளர் போலீசுக்கு மிரட்டல், வழக்கு பதிவு - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 7 April 2024

வாழ்நாள் முழுவதும் உங்களை கோர்ட்டுக்கு அலைய விடுவேன் திருப்பூர் பாஜக வேட்பாளர் போலீசுக்கு மிரட்டல், வழக்கு பதிவு

 


வாழ்நாள் முழுவதும் உங்களை கோர்ட்டுக்கு அலைய விடுவேன் திருப்பூர் பாஜக வேட்பாளர் போலீசுக்கு மிரட்டல், வழக்கு பதிவு 



திருப்பூர்,ஈரோடு எல்லை கோபி செட்டிபாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த கண்காணிப்பு நிலை குழுவினரை பகிரங்கமாக மிரட்டிய பாஜக வேட்பாளர் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தேர்தல் படை கண்காணிப்பு நிலை குழு அமைக்கப்பட்டு மூன்று ஷிப்ட் களாக இரவு பகலாக தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது ஒவ்வொரு குழுவிலும் ஒரு அணி தலைவர் தலைமையில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் ஒரு தலைமை காவலர் ஒரு காவலர் மற்றும் வீடியோ கிராபர் உடன் வாகன சோதனை நடத்தப்படுகிறது அதன் ஒரு பகுதியாக ஈரோடு திருப்பூர் மாவட்ட எல்லையில் கோபி அருகே கெட்டி செவியூர் குறிச்சி பிரிவில் கண் காணிப்பு நிலை குழு அலுவலர் முருகேசன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் புகழேந்தி, தலைமை காவலர் மகேந்திரன், காவலர் மெய்யானந்தம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது திருப்பூரில் இருந்து வந்த பாஜக வேட்பாளர் ஏ பி முருகானந்தம் வந்த காரை கண்காணிப்பு நிலை குழுவினர் வாகன சோதனைக்காக நிறுத்தியுள்ளனர். ஆனால் அவர் காரை ஓரமாக நிறுத்தாமல் சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தியதோடு வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்தார். மேலும் கண்காணிப்பு நிலை குழுவை சேர்ந்த அலுவலர் முருகேசனிடம் நீங்கள் யார் உங்கள் அடையாள அட்டை காண்பியுங்கள் என்று மிரட்டினார். இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தியும் மற்ற காவலர்களும் வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கூறவே அவரது பெயரை கூறுமாறு வேட்பாளர் ஏ பி முருகானந்தம் மிரட்டல் பேசினார். அப்போது அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுவதாகவும் கண்காணிப்பு நிலை குழுவினர் கூறவே ஆத்திரமடைந்த வேட்பாளர் ஏ பி முருகானந்தம் மரியாதையாக பேசிப் பழகுங்கள் உங்கள் அனைவரையும் வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன் என்று பகிரங்கமாக மிரட்டினார் அப்போது காவலர்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறிய போதும் தொடர்ந்து காவல்துறையினருக்கு மிரட்டல் விடுத்த வேட்பாளர் எத்தனை இடத்தில் சோதனை செய்வீர்கள் என்று கேட்டதோடு மிரட்டுகிறீர்களா மிரட்டுமாறு உங்களிடம் யாராவது கூறியுள்ளனரா என்று கேள்வி எழுப்பினார். இவை அனைத்தும் வீடியோவில் பதிவாகியுள்ளது காவல்துறையினர் எந்த இடத்திலும் மரியாதை குறைவாக பேசியதாக அந்த வீடியோவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad