பள்ளி மைதானத்தில் உடற்பயிற்சி செய்பவர்களிடம் நாம் தமிழர் கட்சியினர் மைக் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு !
நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் திருப்பூர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக பேராசிரியர் மா.கி. சீதாலட்சுமி அவர்களை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களம் இறக்கிய நிலையில் திருப்பூர் தொகுதி முழுவதும் வேட்பாளராக அறிவித்த நாள் முதல் தினசரி அதிகாலை முதல் இரவு வரை வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி மற்றும் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள், உறுப்பினர்களுடன் தேர்தல் பரப்புரையை பரபரப்பாக செய்து வருகிறார்கள் இந்த நிலையில் திருப்பூர் 15 வேலம்பாளையம் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் உடற்பயிற்சி , நடை பயிற்சி செய்யும் பொது மக்களிடம் துண்டறிக்கைகளை கொடுத்து ஒலி வாங்கி (மைக்) சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருடன் நாம் தமிழர் கட்சி மாநில, மாவட்ட, தொகுதி ,பாசறை பொறுப்பாளர்கள் வாக்கு சேகரித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment