திருப்பூர் மாநகராட்சி பத்தாவது வார்டில் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு அமைச்சர் வாக்கு சேகரித்தார்
ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தல் களத்தில் திருப்பூர் நாடாளுமன்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் தோழர் சுப்புராயன் அவர்களை ஆதரித்து, வேலம்பாளையம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட 10-வது வார்டில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் மற்றும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு சேகரித்தனர் அப்போது உடன் மரியாதைக்குரிய திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் ,15 வேலம்பாளையம் பகுதி திமுக செயலாளர் கொ. ராமதாஸ் , பத்தாவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் திருமதி பிரேமலதா கோட்டா பாலு மற்றும் காங்கிரஸ் மாவட்ட பொறுப்பாளர் கிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அகாஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment