தாராபுரம் ஒன்றியம் முழுவதும் உதயசூரியன் சின்னத்திற்கு அனல் பறக்கும் பிரச்சாரம்..
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கவுண்டிச்சிபுதூர் ஊராட்சி ராம்நகர் பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இதற்கு அடுத்ததாக தொப்பம்பட்டி ஊராட்சி சினியகவுண்டன் பாளையம்பகுதியில் மாண்புமிகு தமிழகமுதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்ட ஈரோடு பாராளுமன்ற தொகுதிவெற்றிவேட்பாளர் K.E.பிரகாஷ் அவர்களை ஆதரித்து ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன்பாலு, மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி கழக நிர்வாகிகள் ஏற்பாட்டில் கழக துணை பொதுச்செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் திரு அந்தியூர் ப.செல்வராஜ் அவர்கள் மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழிசெல்வராஜ் அவர்கள் மாவட்ட கழக செயலாளர் திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல குழு தலைவர் இல.பத்மநாபன் அவர்கள் ஒன்றிய கழக செயலாளர் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்.விசெந்தில்குமார் அவர்கள் தொகுதி பொறுப்பாளர்கள் கோவை மாவட்ட கழக துணைச் செயலாளர் கோட்டைஅப்பாஸ் அவர்கள் மாவட்டத் கழக துணைச் செயலாளர் ராசிமுத்துக்குமார் அவர்கள் ஆகியோர் தமிழக அரசின் சாதனைகளையும் திட்டங்களையும் எடுத்துக்கூறி பிரச்சாரம் மேற்கொண்டனர்.இதில் இந்தியா கூட்டணியின் கூட்டணி கட்சிகள், தி.மு.க, மாவட்ட, ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பின் இந்நாள் முன்னாள் நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் .
No comments:
Post a Comment