திருப்பூரில் இந்தியா கூட்டணி கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு திமுகவினர் வாக்கு சேகரிப்பு
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் (சிபிஐ ) கட்சியின் வேட்பாளர் சுப்பராயன் எம்பி அவர்களுக்கு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் ,வடக்கு மாவட்ட திமுக செயலாளருமாகிய
க. செல்வராஜ் எம் எல் ஏ அவர்களின் வழிகாட்டுதல்படி திருப்பூர் வடக்கு 15 வேலம்பாளையம் பகுதி கழகம் சார்பாக திமுக நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர். இந்த நிகழ்வில் 14 வது வட்ட கழக செயலாளரும் வடக்கு மாவட்ட விவசாய அணி நிர்வாகியுமாகிய
மு.ரத்தினசாமி அவர்கள் தலைமையில் 14 வது வட்ட திமுக நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் இருசக்கர வாகனங்களில் சென்று வாக்கு சேகரித்தனர்.
No comments:
Post a Comment