எடப்பாடியார் பிறந்தநாள் விழா திருப்பூர் 10 வது வார்டில் பாத்திர கூட்டுறவு சங்க தலைவரின் ஏற்பாட்டில் கொண்டாடப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொது செயலாளருமான மாண்புமிகு எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் 70 வது பிறந்த நாளை திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள பத்தாவது வட்ட கழகத்தில் அனுப்பர்பாளையம் பாத்திர கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கே குணசேகரன் அவர்களது ஏற்பாட்டில் சிறப்பாக மக்கள் விழாவாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் 15 வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் முன்னாள் கவுன்சிலருமான திலகர் நகர் பி. சுப்பு , 10 வது வார்டு வட்ட கழக செயலாளர் முன்னாள் கவுன்சிலருமான வி. செந்தில் குமார் உடன் பத்தாவது வட்ட அதிமுக நிர்வாகிகள் அனைவரும் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பட்டாசுகள் வெடித்தும் பொது மக்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment