திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகில் திண்டுக்கல் மாவட்டம் ராமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் ( வயது 56). இவர் தனது உறவினர்கள் 20 பேருடன் இன்று காலை லோடு ஆட்டோவில் திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே பட்டுத்துறை என்ற இடத்தில் உள்ள மலையாள கருப்பண்ணசாமி கோவிலில் வழிபடுவதற்காக சென்றார்.
தாராபுரம் அருகே மூலனூர் அடுத்த துலுக்க வலசு அருகே செல்லும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இதில் வாகனத்தின் பின்புறத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். சிலர் வாகனத்தின் அடியில் சிக்கினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆம்புலன்ஸ் உதவியுடன் தாராபுரம் மற்றும் வெள்ளகோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் விபத்து குறித்து மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
No comments:
Post a Comment