திருப்பூர் மாநகராட்சி 14 வது வார்டில் புதிய சாக்கடை பணிகள் மேற்கொள்ள கவுன்சிலர் , அதிகாரிகள் ஆய்வு திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் 14 வது வார்டு கல்யாணசுந்தரம் வீதியில் பத்து வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட கழிவுநீர் வடிகால் சாக்கடை உடைந்து சாக்கடை நீர் வெளியேறாத வண்ணம் இந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி நோய் தொற்று அபாயத்திலும் இடிந்த சாக்கடைகளில் குழந்தைகள் அடிக்கடி தவறி விழுந்தும் விடுகின்றனர்
. மேலும் கழிவு நீர் சரிவர போகாததால் மழைக்காலங்களில் கழிவுநீர் வீட்டுக்குள் புகுந்து விடுகின்றது இந்த புதிய சாக்கடை கட்டுவதற்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி மற்றும் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது தமிழக அரசு மற்றும் மாநகராட்சி இந்த இடித்த சாக்கடையை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக சாக்கடை கட்டுவதற்கு திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டல அதிகாரிகள் மற்றும் 14 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சகுந்தலா ஈஸ்வரன் உள்ளிட்டோர் கல்யாணசுந்தரம் வீதியில் இடிந்த சாக்கடை மேல் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு புதிய சாக்கடை கட்டுவதற்கு ஆய்வு செய்தனர் விரைவில் இந்த பணி துவங்க உள்ளதாக பொதுமக்களிடம் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் மாமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment