திருப்பூரில் கந்த சஷ்டி நாளில் பக்தர்களுக்கு பழனி ஆண்டவர் அன்னதான குழுவின் சார்பாக அன்னதானம் செய்யப்பட்டது.
கந்த சஷ்டி நாளை முன்னிட்டு திருப்பூர் திருமுருக சுவாமி திருக்கோவிலில் பொதுமக்கள் முருக பெருமானை தரிசித்து அருள் ஆசி பெற குவிந்தனர். இதையொட்டி பழனி ஆண்டவர் அன்னதான குழுவின் சார்பாக பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பழனி ஆண்டவர் அன்னதான குழுவின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் உணவளித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment