திருப்பூர் மாநகராட்சி ஒண்ணாவது மண்டலம் 13 வது வார்டு சாமிநாதபுரம் பிரதான சாலையில் மழைநீர் சாக்கடை வடிகால் நீர் கட்டிட கட்டுமான பணிகள் நடைபெறுகின்றது இதற்கு தோண்டப்பட்ட குழிகளின் அருகில் உள்ள 20 வருடங்களுக்கு மேலான பெரிய அளவிலான மரங்கள் பாதுகாக்கப்பட்ட மருத்துவ குணம் நிறைந்த மரங்களை வேரோடு அப்புறப்படுத்துகின்றனர் சம்பந்தப்பட்ட வேலை நடக்கும் இடங்களில் அதிகாரிகள் நின்று பார்வையிடுவது இல்லை என்பது பொதுமக்கள் குற்றச்சாட்டாக இருக்கிறது இந்த வேலையை நடக்கும் இடத்தில் இருந்து இபி காலனி பகுதிகள் வரை 50 க்கும் மேற்பட்ட புங்கமரம் ,வேப்பமரம் உள்ளது இதையும் அப்புறப்படுத்தி விடுவார்கள் அதற்குள் இதை மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மரங்கள் இல்லையேல் உயிர்கள் இல்லை மரங்களை அப்புறப்படுத்த கூடாது என்பதே சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment