அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் மே தின விழா கொண்டாட்டம். அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள சங்க மாநில தலைமை அலுவலகத்தில் மே தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநில தலைவர் ஜிகே விவசாய மணி (எ) ஜி.சுப்பிரமணி அவர்கள் தலைமை தாங்கி சங்க கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இனிப்பு வழங்கினார்.
தலைமை ஆலோசகர் எஸ் ,சென்னியப்பன் முன்னிலை வகித்தார் இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர் திரளாக குடும்பத்துடன் கலந்து கொண்டனர் பின்னர் மாநில தலைவர் ஜிகே விவசாய மணி அவர்கள் தொழிலாளர்கள் மத்தியில் பேசும்போது மே மாதத்தின் முதல் நாளை தொழிலாளர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது உழைக்கும் மக்களின் சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் தினமான மே தின நன்னாள் உலகெங்கும் வாழும் தொழிலாளர்கள் உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு உலகை வாழவைக்கும் உழைப்பாளர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகும் உடல் உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்தும் திருநாளாகவும் மே தின திருநாள் கொண்டாடப்படுகிறது இந்த நன்னாளில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் அனைத்து தொழிலாளர்களுக்கும் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு பேசினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment