500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டுவதை கண்டித்து கேரள எல்லை முற்றுகை போராட்டம் - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 27 May 2024

500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டுவதை கண்டித்து கேரள எல்லை முற்றுகை போராட்டம்



500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு அமராவதி ஆற்றின் துணை ஆறான சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டுவதை கேரள எல்லை முற்றுகை நடைபெற்றது


நீதிமன்ற தீர்ப்பையும், சட்டத்தையும் மீறி தடுப்பணை கட்டினால் தடுப்பணையை உடைப்போம் என விவசாயிகள் ஆவேசம்


திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 90 அடி. 4 டிஎம்சி நீர் கொள்ளளவு கொண்டது. 1958-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணை மூலமாக, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும், அமராவதி ஆற்றுப்படுகை மூலமாக 110 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல லட்சம் மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். 


அமராவதி அணையின் முக்கிய நீராதாரங்களாக கேரளா மாநிலம், சட்டமூணார் பகுதியிலுள்ள பாம்பாறு, மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உருவாகி அமராவதி அணையை வந்தடையும் தேனாறு, சிலந்தி ஆறு மற்றும் சின்னாறு ஆகியவை உள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கேரள மாநிலம் காந்தலூர் ஊராட்சிக்குட்பட்ட பட்டிசேரி எனும் இடத்தில், பாம்பாற்றுக்கு வரும் நீரை மறித்து பட்டிசேரி அணை கட்டப்பட்டது. அதற்கு தமிழகத்தில் அனைத்து கட்சியினரும் கடும் ஆட்சேபனை தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்..




இந்நிலையில், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா, வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட, பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே, தற்போது கேரள அரசு  தடுப்பணை கட்டி வருகிறது.


 இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 


தடுப்பணையின் அருகிலேயே மிகப்பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலை உள்ளது. அந்த ஆலையின் தேவைக்காக அமராவதிக்கு வரும் ஆற்றில் அணை கட்டப்பட்டு வருகிறது. இந்த தடுப்பணையை தாண்டி ஒரு சொட்டுநீர் கூட அமராவதி அணைக்கு வராது. இதுபோன்ற கேரளாவின் செயல்பாடுகளால் அமராவதி பாசனம் விரைவில் பாலைவனம் ஆகிவிடும். கீழ் இறங்கு நீர் பாசன உரிமை (Riparian right) பெற்ற தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் கேரள அரசு தடுப்பணை கட்டுவது சட்ட விரோதமாகும்.


மேலும் வனப்பகுதியில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக இந்த அணை கட்டப்பட்டு வருகிறது, கடந்த இரண்டு நாட்களாக பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவையும் மீறி கட்டுமான பணிகளை கேரளா திமிர்த்தனத்துடன் செய்து வருகிறது.


இந்த சூழ்நிலையில் இன்று (26-05-2024) திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் இருந்து மூணார் செல்லும் வழியில் உள்ள சின்னார் சோதனை சாவடியை முற்றுகை இடுவதற்காக 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி அவர்களின் தலைமையில் திரண்டு சென்று போது அமராவதி பிரிவு அருகில் உள்ள 9/6 சோதனைச் சாவடியில் காவல் துறையால் தடுக்கப்பட்டதால், விவசாயிகள் அங்கேயே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.


200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு குறிச்சிக் கோட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இன்றைய முற்றுகை போராட்டத்தில் அமராவதி பாசன சபை தலைவர்கள் R.T. மோகன் ஜோதி , சண்முகசுந்தரம், மரகதம் அய்யாசாமி, வெங்கடேஷ், புதுப்பை செந்தில் - சாமிமுத்து, அரவக்குறிச்சி விவேக், மின்னாம்பள்ளி ராஜேந்திரன், துரைசாமி ஆகியோர் மற்றும் முன்னாள் பாசன சபை தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.


தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் இரா. சண்முகசுந்தரம், மாநில பொதுச் செயலாளர் சு. முத்து விசுவநாதன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் முகிலன், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்  சு. இரவி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சி. நேதாஜி, கூட்டுறவு சங்க அணி மாநில ஒருங்கிணைப்பாளர் குடிமங்கலம் குப்புசாமி, வேளாண் தொழில் முனைவோர் மன்றத்தின் மாநில செயலாளர் ஐந்துணை வேலுச்சாமி, தென்னை விவசாயிகள் அணி மாநில செயலாளர் மந்ராச்சலம், இனாம் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் கருணாமூர்த்தி, இயற்கை விவசாயிகள் அணி மாநில செயலாளர் அலெக்ஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். 


சங்கத்தின் திருப்பூர் தெற்கு மாவட்ட அவை தலைவர், மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், அணி மாவட்ட செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள்


ஆகியோருடன் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர்  செந்தில்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் ABT. M. மகாலிங்கம், திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன்,  கரூர் மாவட்ட செயலாளர் தென்னிலை ராஜா, இளைஞரணி துணை செயலாளர்கள் அன்னூர் கோபால்சாமி, செஞ்சி ரமேஷ், காவேரிப்பாக்கம் ஒன்றிய செயலாளர் ராணிப்பேட்டை தேவராஜ், காவேரி ஆறு பாதுகாப்பு இயக்க  ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் மற்றும் சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், சங்கத்தின் உறுப்பினர்கள், உழவர் போராளிகள், அமராவதி ஆயாக்கட்டு விவசாயிகள் ஆகியோர் மிக சிறப்பாக கலந்து கொண்டனர்.


இப்படிக்கு வழக்கறிஞர் ஈசன் முருகசாமி  நிறுவனர்  இரா. சண்முகசுந்தரம் மாநில தலைவர் சு. முத்து விஸ்வநாதன்,மாநில பொதுச் செயலாளர் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்.

No comments:

Post a Comment

Post Top Ad