திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பாப்பனூத்து பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 29), காற்றாலையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்தநிலையில் அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து அவருக்கு மறுமணம் செய்த பெண் பார்த்து வந்தனர். அப்போது கேரள மாநிலம் கொழிஞ்சம்பாறை பகுதியை சேர்ந்த திருமண புரோக்கர் ஒருவர் ராதாகிருஷ்ணனை அணுகினார். அவர் கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை கண்டுள்ளார். அந்த பெண் ராதாகிருஷ்ணனுக்கு பிடிக்கவே திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதனிடையே பெண்ணின் வீட்டில் வசதி இல்லாததால் ஏதாவது உதவி செய்யுமாறு புரோக்கர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ராதாகிருஷ்ணன் வீட்டனர் அந்த பெண்ணுக்கு 1½ பவுனில் நகை போட்டுள்ளனர். மேலும் புரோக்கருக்கு ரூ. 80 ஆயிரம் கொடுத்துள்ளனர். இதை அடுத்து சில தினங்களுக்கு முன்பு திருமூர்த்தி மலையில் திருமணம் நடைபெற்றது.
அதன் பிறகு தாராபுரம் வந்தவர்கள் முதலிரவுக்குத் தயார் செய்யப்பட்டபோது பெண்ணுக்கு மாதவிடாய்ப் பிரச்சனை இருந்ததால் வேறொரு நாளில் முதல் இரவு வைத்துக் கொள்ளலாம் என கேரள பெண் தெரிவித்தார். அதையடுத்து மறுநாள் பொள்ளாச்சிக்கு அம்மாவை பார்க்க சென்ற பெண் திடீரென தலை மறைவானார். இதையடுத்து ராதாகிருஷ்ணன் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து கொண்டார்.
இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், நகை பணத்திற்காக ராதாகிருஷ்ணனை ஏமாற்றி கேரள பெண் திருமணம் செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. மேலும் அந்தப் பெண்ணின் கணவர் தான் திருமண புரோக்கர் போல் செயல்பட்டார் என்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் திருமணம் ஆகாத பல வாலிபர்களிடம் பணம் மற்றும் நகையை பறிப்பதற்காக அந்த புரோக்கர் தனது மனைவியையே வேறு வாலிபர்களுக்கு திருமணம் செய்து வைத்து நூதன திருமண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்தப் பெண்ணுக்கு குழந்தையும் உள்ளது. இருப்பினும் அவர்கள் பணத்திற்காக இந்த நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் போலீசில் சிக்காமல் இருக்க தங்களது பெயரை மாற்றி கொடுத்து ஏமாற்றி வந்துள்ளனர். இதையடுத்து தாராபுரம் போலீசார் திருமண புரோக்கரையும், அவரது மனைவியையும் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment