திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பல சுற்றுலா தலங்களை கொண்ட முக்கியமான சட்டமன்ற தொகுதி ஆகும் இந்த தொகுதியில் அதிமுகவை சார்ந்த ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவாக உள்ளார். திமுகவை சார்ந்த மத்தீன் நகர மன்ற தலைவராக உள்ளார். இந்த நிலையில் இங்கு உள்ள உடுமலை மத்திய பேருந்து நிலையம் முழுவதும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
மேலும் சாக்கடை கழிவு நீர் சூழ்ந்துள்ளது துர்நாற்றம் வீசிய நிலையில் உள்ளதால் பயணிகள் மூக்கை பிடித்துக் கொண்டு நடமாட வேண்டி உள்ளது. பேருந்து நிலையத்திற்குள் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் உள்ளது சுகாதார ஆய்வாளர்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி கொண்டு சுகாதார வேலைகள் சரிவர செய்வதில்லை என்பது பயணிகளின் குற்றச்சாட்டாகும் சுகாதாரப் பணியாளர்கள் இருக்கின்றார்களா இல்லையா என்றும் உடுமலை நகராட்சி அலுவலகம் சுத்தமாக ஏசி அறைகளுடன் இருக்கும் பொழுது உடுமலை பேருந்து நிலையம் நோய் பரப்பும் ஒரு கிடங்காக இருக்கிறது என்றும் மிகப் புகழ்பெற்ற சுற்றுலா தளமான திருமூர்த்தி மலை ,அமராவதி, மூணார் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் உடுமலை பேருந்து நிலையத்திற்கு வந்து தான் பயணிக்க வேண்டிய சூழலில் உள்ளது சில நேரங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூணார் பகுதிக்கு செல்வதற்கும் இந்த உடுமலை பேருந்து நிலையம் வழியாகத்தான் பேருந்தில் செல்வார்கள் இந்த நிலையில் உடுமலை பேருந்து நிலையம் முழுவதும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது இதை உடனே சீர்படுத்த வேண்டும் என்பதை பயணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாகும் நிறைவேற்றுமா உடுமலை நகராட்சி.?
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment