திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட குளத்து புஞ்சை தெரு 13, வது வார்டு பகுதியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிக்கு ஆழ்துளை கிணறுகள் மற்றும் காவேரி கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வந்தனர்.
மேலும் ஒரு வாரத்திற்கு 4, குடம் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுவதாக அப்பகுதி பெண்கள் தெரிவிக்கின்றனர். இதனால் காலை நேரங்களில் பணிக்கு செல்வோர் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது.இது குறித்து தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில்
அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்தனர்.ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் இன்று கடும் சுட்டெரிக்கும் கத்திரி வெப்பத்தில் காலி குடங்களுடன் தாராபுரம் புறவழி சாலைக்கு செல்லும் வழியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாராபுரம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு போலீசாரின் பேச்சு வார்த்தை அடுத்து சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.
No comments:
Post a Comment