கோடை வெயிலில் மக்கள் தாகம் தீர்க்க திருப்பூர் வடக்கு திமுக சார்பில் தண்ணீர் பந்தல்
வெளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாத்திட, திருப்பூர் வடக்கு மாவட்டம் தி.மு.கழகத்தின் சார்பில் வேலம்பாளையம், போயம்பாளையம் பிரிவு, மாநாகராட்சி அலுவலகம் எதிரில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பேருந்து நிலையம், செட்டிபாளையம் ஆகிய பொதுமக்கள் அதிகம் திரளும் ஐந்து இடங்களில் தாகம் தீர்க்கும் பழவகைகளுடன் நீர் மோர் பந்தலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தெற்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் திறந்து வைத்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில், தெற்கு மாநகர செயலாளர் டிகேடி. மு.நாகராசன், வடக்கு மாநகர செயலாளர்; மரியாதைக்குரிய மேயர் ந.தினேஷ்குமார், பகுதி கழக செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment