திருப்பூரில் கணவனை மீட்டுத்தர கூறி குழந்தைகளுடன் பெண் காவல் நிலையத்தில் தர்ணா போராட்டம். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 31 May 2024

திருப்பூரில் கணவனை மீட்டுத்தர கூறி குழந்தைகளுடன் பெண் காவல் நிலையத்தில் தர்ணா போராட்டம்.



திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பெருமாள் பாண்டியன் இவரது மனைவி ஜெயசித்ரா இவர்களுக்கு 9 வயது மகன் மற்றும் 12 வயது மகள் உள்ள நிலையில் இவர்அனுப்பர்பாளையம்  பகுதியை சேர்ந்த அமுதா என்ற என்னுடன் தவறான பழக்கம் ஏற்பட்டு தங்களை சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டு அவருடன் வாழ்ந்து வருவதாகவும் கணவர் பெருமாள் பாண்டியனை மீட்டு தர வேண்டும் எனக் கூறி பாதிக்கப்பட்ட பெருமாள் பாண்டியன் மனைவி ஜெயசித்ரா திருப்பூர் வடக்கு காவல் மகளிர் நிலையத்தில் புகார் அளித்தார் என்றும் தனது புகாரை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் அமுதா என்ற பெண்ணிடம் பணத்தை பெற்றுக்கொண்டு தன் மீது அமுதா கொடுத்த கொலை மிரட்டல் புகாரை பதிவு செய்ததாகவும் தனக்கு நியாயம் வேண்டும்.


 தனது கணவரை மீட்டு தர வேண்டும் எனக்கோரி வடக்கு காவல் நிலையத்தில் உள்ள மகளிர் காவல் நிலையம்  முன்பாக அமர்ந்து ஜெயசித்ரா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து ஜெயசித்ராவை அழைத்துச் சென்ற மகளிர் காவல் துறையினர் அவரிடம் புகார் பெற்று கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad