திருப்பூர் மாநகராட்சி 34 வது வார்டிலிருந்து 32வது வார்டு முடியும் பாளையங்காடு ரயில்வே மேம்பாலம் பணிகள் பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.
மூன்று மாதங்களுக்கு முன்பாக அரசியல் பிரமுகர்களால் திறந்து வைத்த இந்த மேம்பாலம் கடந்த 10 நாளாக மின்விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கியுள்ளது. இது வழியாக பயணிக்கும் பணியன் கம்பெனி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் வரும் பொழுதும் போகும் பொழுதும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது இந்த பாலம் இருளில் மூழ்கியுள்ளதால் இந்த இருட்டை பயன்படுத்தி அங்கு பல்வேறு அசம்பாவிதங்கள் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறதாகவும்
இங்கு அமர்ந்து கொண்டு மது பிரியர்கள் மது அருந்துவதும் பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு உடைத்து விட்டு செல்வதுமாக உள்ளனர்.
இதனால் பொதுமக்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், விளக்குகளை உடனடியாக சீர் செய்து தர அதிகாரிகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும், கோரிக்கை விடுத்தும் இது நாள் வரை சரி செய்யவில்லை எனவும் உடனடியாக இந்த பாலத்தில் உள்ள மின் விளக்குகளை எரிய வைக்க வேண்டும் எனவும் தாமதப்படுத்தினால் அந்த பகுதி பொதுமக்கள் அரை நிர்வாண போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment