பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம். கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பாலஸ்தீன மக்கள் மீது பயங்கரவாத இஸ்ரேல் நடத்திவரும் காட்டுமிராண்டி
தாக்குதலால் இதுவரை 50 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்..
கடந்த சில நாட்களுக்கு முன் காஸாவில் ரஃபா நகரில் பொதுமக்கள் குடியிருப்பு மீது இஸ்ரேலிய பயங்கரவாதிகள் நடத்திய மோசமான வெடிகுண்டு தாக்குதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் பெண்கள் கொடூரமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் வாழும் பெரும்பாலான பொதுமக்கள் இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் பெரும் போராட்டங்களையும் கண்டன குரல்களையும் கொடுத்து வருகிறார்கள்.
.
இந்நிலையில் திருப்பூர் பகுதியில் பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலிய பயங்கரவாதிகளுக்கு எதிராகவும்
SDPI கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக அனைத்து இஸ்லாமியர்களும் பள்ளிவாசலுக்கு வெளியே ஒன்று திரண்டு இஸ்ரேலிய பயங்கரவாதிகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பும் போராட்டத்தை எஸ்டிபிஐ கட்சி நடத்தியது .
இந்த போராட்டத்தில் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களும் கலந்துகொண்டு கைகளில் பதாகைகள் ஏந்தி கொண்டு பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்தனர்.
பெரிய பள்ளிவாசல்,
பெரிய தோட்டம் ,
மதினா பள்ளி,
ஷாஃபி பள்ளி,
பிலால் பள்ளி
யாசீன் பாபு நகர் ,
மஸ்ஜிதே நவவி ,
(ஹவுசிங் யூனிட்..)
மஸ்ஜிதே முத்தகீம், ஹவுசிங் யூனிட்..)
மஸ்ஜிதே ஜமால்,
ஹவுசிங் யூனிட்..)
காதர்பேட்டை ,
SAP ,
கணக்கம்பாளையம் ,
பாண்டியன் நகர் ,
மேட்டுப்பாளையம் ,
MS நகர்,
ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களுக்கு வெளியே போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அடுத்து வரும் சில நாட்களில் SDPI கட்சியின் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் திருப்பூரில் நடைபெறும் என்று எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment