மின் கட்டண உயர்வை எதிர்த்து உயிர் நீத்த விவசாய தியாகிகளுக்கு அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருப்பூர் பெருமாநல்லூரில் 1970 ம் ஆண்டு மின்சார கட்டணத்தை குறைக்க கோரி நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த விவசாய தியாகிகள் ராமசாமி கவுண்டர்,மாரப்ப கவுண்டர்,ஆடிக் கவுண்டர் ஆகியோர் களின்54 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் உள்ள அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் தியாகிகளின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு பெருமாநல்லூருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர ,நான்கு சக்கர வாகனங்களில் பேரணியாக நிறுவனத் தலைவர் திரு.G.K. விவசாய மணி (எ) G. சுப்பிரமணி அவர்கள் தலைமையில் சென்று பெருமாநல்லூர் நினைவிடத்தில் உள்ள விவசாய தியாகிகளின் நினைவு ஸ்தூபியில் மலர்வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் மாநில, மாநகர, மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி, நகராட்சி, வார்டு நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment