திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் மன்ற கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த 17 வார்டு கவுன்சிலர்கள் கூட்டத்தைப் புறந்தள்ளி வெளிநடப்பு செய்தனர்.
தாராபுரம் நகராட்சி மன்ற கூட்டத்தில் முக்கிய பிரச்சனைகள் பற்றி கவுன்சிலர்கள் பேசும் போது நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக 40 க்கு 40 வெற்றி பெற்றதை பொறுத்து கொள்ள முடியாமல் தாராபுரம் நகராட்சி அதிகாரிகள் வார்டில் எந்த ஒரு வேலையும் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளை கவுன்சிலர்கள் வைத்தார் பிறகு கவுன்சிலர்களை தாராபுரம் நகராட்சி அதிகாரிகள் ஒருவர் கூட மதிப்பதில்லை என்றும் வார்டு கவுன்சிலர்கள் குற்றச்சாட்டாக உள்ளது மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கவுன்சிலர்கள் சரஸ்வதி எக்ஸ் எம்எல்ஏ, உமா மகேஸ்வரி, தனலட்சுமி, மலர்விழி, ஷாலினி, சாஜிதா பானு, செல்லின் பிலோமினா, முத்துலட்சுமி, புனிதா, தேவி அபிராமி, கமலக்கண்ணன், சக்திவேல், ராஜேந்திரன், முகமது யூசுப், அன்பழகன், ஸ்ரீதரன் ஆகியோர் மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர் .
No comments:
Post a Comment