திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் அவர்கள் பேரறிஞர் அண்ணா சிலைக்கும், தந்தைபெரியார் சிலைக்கும், கலைஞர் திருஉருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார், அதன் பிறகு சிவரஞ்சனி மஹாலில் அனைவரையும் சந்தித்து நன்றி கூறினார், இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக செயலாளர் இல.பத்மநாபன் அவர்கள் தலைமை தாங்குகினார்.
தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார்.ஒன்றியசெயலாளர் செந்தில்குமார், நகர்மன்ற தலைவர் பாப்புக்கண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபாவதி பெரியசாமி, சரஸ்வதி ராஜேந்திரன்,கொளத்துப்பாளையம் பேரூர், சின்னக்கம்பாளையம் பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும், இந்தியா கூட்டணிக்கு ஆதரவு வழங்கிய பல்வேறு கூட்டமைப்பை சேர்ந்தவர்களும் , கழக இந்நாள் முன்னாள் நிர்வாகிகள் என பலர் திரளாக கலந்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment