அவினாசி பேரூராட்சியில் உள்ள
பழங்கரை ஊராட்சியை, திருப்பூர் மாநகராட்சியோடு இணைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் அவிநாசிலிங்கம் பாளையம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட முன்னேற்ற க் கழகம்
இந்திய தேசிய காங்கிரஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்,
அஇஅதிமுக
தேமுதிக
அமமுக
பிஜேபி உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்
அனைத்து கட்சி பொறுப்பாளர்களும் ஒரே கருத்தாக பழங்கரை ஊராட்சியை திருப்பூர் மாநகராட்சியோடு இணைக்க வேண்டாம் எனவும்
அவிநாசி நகராட்சியாக தரம் உயர்த்தும் போது அவனாசியோடு பழங்கரை ஊராட்சியை இணைத்து அவிநாசி நகராட்சியாக அறிவிக்க வேண்டும் எனவும் ,
அல்லது பழங்கரை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கூட்டத்தில் அனைவரும் ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment