எஸ் டி பிஐ கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக மாநகராட்சி முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் .
தமிழக அரசின் தொடர் விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, முத்திரைத்தாள் கட்டண உயர்வை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு வடக்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பாகஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் வடக்கு மாவட்ட தலைவர் வி கேன் பாபு தலைமையில் மாவட்ட பொது செயலாளர் ஹிதாயத்துல்லா வரவேற்புரை நிகழ்த்தினார்.
எஸ்டிடியு மாவட்ட தலைவர். சித்திக் ,விம் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் ஹபீபா, அபுதாஹிர், எஸ்டிபிஐ மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
எஸ்டிபிஐ கட்சி மாநில செயலாளர்.
அபூபக்கர் சித்திக் ,
எஸ்டிடியு தொழிற் சங்க மாநில பொது செயலாளர்
ரவூஃப் நிஸ்தார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மாவட்ட துணை தலைவர். அப்துல் சர்தார் நன்றி உரையாற்றினார். இந்த
ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் பெண்கள்திரளாக கலந்து கொண்டு கைகளில் பதாகைகள் ஏந்தி கொண்டு விலைவாசி உயர்வு மற்றும் வரியினங்கள் உயர்வை கண்டித்து கோசங்களை எழுப்பினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment