தேர்தல் ஆணையத்தால் நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றதை தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
திருப்பூர் நாம் தமிழர் கட்சி வடக்கு தொகுதி சார்பாக திருப்பூர் பிச்சம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி கொடி கம்பத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உருவாக காரணமான பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொது மக்களுக்கு மரகன்றுகள் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட நிர்வாகிகள், பாசறை பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment