தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் நல்லாசியுடன் திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் முத்தனம் பாளையம் கரிய காளியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் எக்ஸ் எம்எல்ஏ அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக அவர் மண்டபத்தின் உள்ளே அமர்ந்திருந்த தொண்டர்கள் உடன் அமர்ந்து இருந்தார். இதைக் கண்ட தொண்டர்கள் உற்சாகமடைந்தனர் மிகவும் எளிமையான ஒரு பொதுச் செயலாளர் தங்களுக்கு அமைந்திருப்பதாக பெருமிதத்தோடு தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட, மாநகர, ஒன்றிய, கிளை, மகளிர் அணி உள்ளிட்ட, அனைத்து அணி, மற்றும் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment