முன்னாள் திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமாகிய கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 101-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாளை 3/6/2024 திங்கட்கிழமை காலை 8-மணி அளவில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தெற்கு சட்டமன்ற உறுப்பினருமாகிய க.செல்வராஜ் எம் எல் ஏ அவர்களின் தலைமையில் திருப்பூர் ரயில் நிலையம் அருகில் பெரியார், அண்ணா சிலை முன்பு அமைக்கப்பட்டுள்ள டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி,மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட உள்ளது ஆகையால் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி , வட்ட திமுக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்,
தொ.மு.ச பேரவை நிர்வாகிகள், இந்நாள்,முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக உடன்பிறப்புகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என திருப்பூர் தெற்கு மாநகர திமுக சார்பாக கேட்டு கொள்கிறேன் இவ்வாறு டிகேடி.மு.நாகராசன் அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment