பல்லடத்தில் வாழ்வு ஆதாரத்திற்காக ஆட்டோ ஓட்டுனர்கள் குடும்பத்துடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 June 2024

பல்லடத்தில் வாழ்வு ஆதாரத்திற்காக ஆட்டோ ஓட்டுனர்கள் குடும்பத்துடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை


திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பல்லடம் பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகளில் கூடுதல் ஆட்டோக்களை நியமிப்பது தொடர்பாக இரு தரப்பு ஆட்டோ ஓட்டுநர் இரண்டு நாளாக போராட்டம் முற்றுகை வாக்குவாதம் என நடைபெற்று வருவதால் பல்லடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, பேருந்து நிலையத்தின் உள்வாயில் மற்றும் வெளிவாயில் இரண்டு இடங்களிலும் இரண்டு ஆட்டோ ஸ்டாண்டுகளில் 42 ஆட்டோக்கள் அன்றாடம் ஆட்டோ ஸ்டாண்ட் ஆக ஏற்படுத்தி அதில் வரிசையாக பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்வர்,


இந்நிலையில் பல்லடத்தில் பிற பகுதிகளில் ஆட்டோக்களை இயக்கும் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகளில் தங்கள் ஆட்டோக்களை வாடகைக்கு ஓட்டுவதற்காக அனுமதிக்க வேண்டும் என்று சார் ஆட்சியரிடம் மனு கொடுத்து வலியுறுத்தினர் தொடர்ந்து பேருந்து நிலையத்தின் இரு ஆட்டோ ஸ்டாண்ட் உரிமையாளர்களும் வட்டாட்சியரிடம் மனு கொடுத்து இதற்கு உண்டான பிரச்சனையை தீர்த்து வைக்க கூறினர், இந்நிலையில் நேற்று மாலை வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது, அப்போது வட்டாட்சியர் கூடுதல் ஆட்டோக்களை அனுமதிக்க கோரியபோது அதனை ஏற்க மறுத்த 42 ஆட்டோ ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் இதுவரை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆட்டோ ஸ்டாண்ட் பிற நபர்கள் வர அனுமதிக்க மாட்டோம் என்று கூறி வட்டாட்சியர் ஜீவானந்தத்திடம் இரவு 11 மணி வரை நேற்று வாக்குவாதம் நடைபெற்றது.


 இதனால் பரபரப்பும் ஏற்பட்டது,இந்நிலையில் இன்று பிற பகுதிகளில் இருந்து அனுமதி கூறிய ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களுக்கு அனுமதிக்க ஆணை பிறப்பித்ததாகவும் அதனை தற்போது ரத்து செய்ததாகவும் உடனடியாக தங்களை அதே பேருந்து நிலைய ஆட்டோ ஸ்டாண்டில் தங்களுடைய எட்டு ஆட்டோ வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என்று கூறி குடும்பத்துடன் கர்ப்பிணி பெண்கள் உட்பட சுமார் 50 க்கும் மேற்பட்டவர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad