திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள 26,000 மக்கள் தொகை கொண்ட முதல் நிலை கிராம ஊராட்சியான பழங்கரை கிராம ஊராட்சியை தமிழக அரசு பேரூராட்சியாக தரம் உயர்த்துக என்ற கோரிக்கையை முன்வைத்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர். கே .சுப்பராயன்.எம்.பி. அவர்களிடம் பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட அனைத்து கட்சி தலைவர்கள் சார்பில் பழங்கரை ஊராட்சி மன்றத் தலைவர்
திருமதி.பி.கோமதி யுடன் அனைத்து கட்சியினர் கோரிக்கை மனு வழங்கினார்கள்
வளர்ந்து வரும் பழங்கரை ஊராட்சியை, நீண்ட காலமாக பேரூராட்சி நிலையிலேயே உள்ள அவிநாசியோடு இணைத்து அவிநாசியை நகராட்சியாக தரம் உயர்த்திடுக எனவும் தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment