திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா சித்தம்பலம் கிராமத்தில் வசிக்கும் மாற்று திறனாளி இந்திராணி அவர்கள் தனியாக வசித்து வருகிறார்.இவருடைய அம்மா இறந்து விட்டார்.
இவர் திருப்பூர் இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் இந்திரா சுந்தரம் அவர்களை தொடர்பு கொண்டு தனக்கு தையல் மிஷின் வாங்கி கொடுங்கள் என் வாழ்வாதாரத்திற்கு என்று கோரிக்கை விடுத்தார்.இதையடுத்து சமூகசேவகி இந்திரா சுந்தரம் அவர்கள் மாற்றுத்திறனாளி இந்திராணி அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று பார்த்து உங்களுக்கு பவர்மிஷின் வாங்கி தரட்டுமா என்று கேட்டார். எனக்கு அது ரொம்ப கஷ்டமாக இருக்கும் வேண்டாம் என்று சொல்லியதால்.
அவர் கேட்ட தையல் மிஷின், அதில் பொறுத்தக்கூடிய மோட்டார் வாங்கி இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பாக வழங்கி வழங்கினார்.
நன்றி தெரிவித்து தையல் மிஷினை பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளி இந்திராணி தான் குடியிருக்கும் சுற்று வட்டாரத்தில் உள்ள மிகவும் கஷ்டப்படும் வயதானவர்கள், மாற்றுதிறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் வேண்டி கோரிக்கை வைத்தார்.அதற்கு இந்திரா சுந்தரம் அவர்கள் எவ்வளவு பேர் என்று சொல்லுங்கள் வாங்கி தருகிறோம் என்று கூறினார்.
தனக்கு மட்டும் இல்லாமல் தன்னை சுற்றி உள்ளவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மிகவும் பாராட்டதக்கது.கண்டிப்பாக உதவி செய்வோம் என்று உறுதியளித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment