திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் 19.06.1970 வருடம் தமிழக அரசுக்கு எதிராக விவசாய சங்க கட்சியினர் மின் உயர்வை குறைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்த போது ஏற்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணமாக போலீசாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் மாரப்ப கவுண்டர் வாரணாசி பாளையம், ஆயி கவுண்டர் ஈச்சம்பள்ளம், ராமசாமி கவுண்டர் புதுப்பாளையம், ஆகியோர் துப்பாக்கி சூட்டில் இறந்தது தொடர்பாக அவர்களுக்கு நினைவு செலுத்தும் வகையில் அவ்விடத்தில் விவசாய சங்கத்தினரால் நினைவு ஸ்தூபி நிறுவப்பட்டு வருடம் தோறும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில் திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் கலந்து கொண்டு நினைவு ஸ்தூபியில் மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment