தாராபுரம் கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது..
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திராவிட இயக்கத்தின் தலைமைச் செயலகமாக அரை நூற்றாண்டுக்கும் மேல் தமிழ்நாட்டு அரசியலின் திசையைத் தீர்மானித்த கலைஞர் அவர்களின் பிறந்தநாளான இன்று கலைஞர் அவர்களின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு தாராபுரம்
வடதாரையிலிருந்து அண்ணா சிலை வரை ஊர்வலம் நடைபெற்றது.அதன் பின் கலைஞர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் அவர்கள் கழக கொடியேற்றி விழாவை சிறப்பித்தார்,தாராபுரம் நகர கழக செயலாளர் சு.முருகானந்நம் அவர்கள் விழாவை தலைமை தாங்கினார், நகர மன்ற தலைவர் பாப்புக் கண்ணன் அவர்கள் மற்றும் கழகத்தின் மூத்த முன்னோடிகள் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய,பேரூர்,கழக இந்நாள், முன்னாள் நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் அனைத்து அணிகளின் இந்நாள், முன்னாள் நிர்வாகிகள் கழக செயல் வீரர்கள் அனைவரும் பங்கு பெற்று தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment