திருப்பூர் தெற்கு மாவட்டம் பல்லடம் பஸ் நிலையம் முன்பு தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட தலைவர் அப்துல் காயூம்தலைமை வகித்தார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான் முன்னிலை வகித்தார் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்சல்
மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைமை கழக பேச்சாளர் எம் ஜே. அபுசாலி கண்டன உரையாற்றினர்.மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள்,பல்லடம் நகர நிர்வாகிகள், உடுமலை மற்றும் தாராபுரம் நகர நிர்வாகிகள் ,சோழமாதேவி ஒன்றிய நிர்வாகிகள்,மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment