ரோடு முழுவதும் பாறைகள் கண்டு கொள்ளாத திருப்பூர் மாநகராட்சி அலுவலர்கள். திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் அனுப்பர்பாளையத்தில் தனியார் ஒப்பந்ததாரர்கள் சாக்கடைகள் பணிகளுக்காக பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு நடைபாதையாக போடப்பட்டிருந்த கற்களை அகற்றி நடுரோட்டில் போட்டுள்ளதால் இந்த ரோட்டில் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் தடுமாறி பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது பொதுமக்கள் நடமாட முடியாத அளவிற்கு பெரிய பெரிய பாறைகளை ரோட்டில் போட்டு உள்ளார்கள் இதை உடனடியாக ஒழுங்குபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த ரோட்டில் மாநகராட்சி ஒன்றாவது மண்டல சுகாதார பிரிவு அலுவலகம் உள்ளது அவர்களும் இதை கண்டு கொள்ளாமல் உள்ளார்கள்.
என்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் பகுதிகளில் தனியார் ஒப்பந்ததாரர்கள் சாலைகளில் குடிநீர் பணிகள் சாக்கடை பணிகளுக்கு தோண்டப்படும் குழிகளை மற்றும் தோண்டி எடுத்த மண் பெரிய கற்கள் போன்றவற்றை சாலையில் ஒழுங்குபடுத்தாமல் பொதுமக்களுக்கு இடையூறாக போடுவது தொடர்ச்சியாக உள்ளது இதுபற்றி சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயருக்கு புகார் கொடுத்த வண்ணம் இருந்தாலும் தனியார் ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் எதையும் கண்டு கொள்வது இல்லை பொதுமக்களுக்கு இடையூறு செய்வது தொடர்கதையாக உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment