கலைஞர் பிறந்தநாளில் திருப்பூர் வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மு.ரத்தினசாமி ஏற்பாட்டில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் !
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்று ஒன்றாவது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட மாநகர விவசாய அணி சார்பாக விவசாயிகளுக்கு விவசாய உதவி கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது திருப்பூர் ரயில் நிலையத்தின் முன்பு உள்ள அண்ணா பெரியார் சிலை , முன்பு அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்பு திருப்பூர் வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மு. ரத்தினசாமி அவர்கள் ஏற்பாட்டில் கலைஞரின் நூற்று ஒன்றாவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக விவசாயிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள விவசாய கருவிகள் கடப்பாரை ஒன்று, மம்முட்டி ஒன்று, கொத்து ஒன்று, இரும்பு சட்டி ஒன்று, கருத்த கருவால் இரண்டு, பூச்சி மருந்தடிக்க பயன்படும் பவர் பேரர் உள்ளிட்ட விவசாய கருவிகளை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தெற்கு தொகுதி எம்எல்ஏ வுமான க. செல்வராஜ் அவர்கள் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.
இந்த நிகழ்வில் தெற்கு மாநகர செயலாளரும், மாநில தொமுச துணை செயலாளருமான டி கே டி. மு.நாகராசன், வடக்கு மாநகர செயலாளரும், மரியாதைக்குரிய திருப்பூர் மாநகர மேயர் ந.தினேஷ்குமார் ,மாநகர திமுக எஸ். திலக் ராஜ் மற்றும் திருப்பூர் மாவட்ட ,மாநகர, விவசாய அணி பொறுப்பாளர்கள் மற்றும் திமுக, மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, மாமன்ற உறுப்பினர்கள, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment