திருப்பூர் மாவட்டம் தாராபுரம் திமுக நகர செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த தாராபுரம் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து பொதுமக்களை நேரில் சந்தித்து லட்டு, கேக், சாக்லேட், வழங்கி நன்றி தெரிவித்தனர். இதற்கு முன்னதாக அண்ணாசிலை, பகுதியில் 10000 வாலா சரவெடி பட்டாசு வெடித்தனர். அதனைத் தொடர்ந்து டிரம் செட்டுகள் முழங்க ஊர்வலமாக பெரிய கடை வீதி, பூ கடைக்காரர், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்த மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
மேலும் தாராபுரம் நகரில் உள்ள ஒன்று முதல் 30 வார்டுகளில் உள்ள மக்களுக்கு வீடு வீடாக சென்று நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன், கவுன்சிலர் ஹைடெக் அன்பழகன் உள்ளிட்ட திமுகவினர் 300,க்கும் மேற்பட்டோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment