திருப்பூர் மாநகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை சேர்ப்பதற்கு எதிர்ப்பு பல்லடம் அருகே அறிவொளி நகர் பகுதியில் பொதுமக்கள் தர்ணா - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 9 June 2024

திருப்பூர் மாநகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை சேர்ப்பதற்கு எதிர்ப்பு பல்லடம் அருகே அறிவொளி நகர் பகுதியில் பொதுமக்கள் தர்ணா
திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் பெருமாநல்லூர், மங்கலம்,கணக்கம்பாளையம்,கரைப்புதூர் 63 வேலம்பாளையம் உள்ளிட்ட 19 ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைப்பதற்கான முதல் அறிவிப்பை 16.5.2024 அன்று வெளியிட்ட நிலையில் இதன் ஒரு ஊராட்சியான பல்லடம் அருகே ஆறு முத்தாம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளும் அடங்கும் ஆகவே தங்கள் ஊராட்சியை இணைப்பதற்கு தாங்கள் எதிர்ப்பு  தெரிவிப்பதாக கூறி   இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள்  அறிவொளிநகரில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர், இது பற்றி பொதுமக்கள் கூறியதாவது  மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைத்தால்  தங்களின் வரி மும்மடங்கு ஆகும் என்றும் மாநகராட்சிக்கும் தங்களுக்கும் அதிக தூரம் இருப்பதாகவும் பேருந்து வசதிகள் கூட இல்லாத இப்பகுதியில் மாநகராட்சிக்கு சேர்த்தால் பெரும் அவதியில் மக்கள் வாழ வேண்டும் என்றும் கூறி இந்த போராட்டத்தில் இன்று ஒரு நாள் ஈடுபட்டுள்ளனர்.


இதனால் தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய பெருங்குழு தலைவர் தேன்மொழி பேச்சுவார்த்தை நடத்தினர்,மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று இதற்கான தடுப்பு நடவடிக்கையை எடுக்கிறோம் என்று அவர்கள் உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து தற்காலிகமாக அவர்கள் கலைந்து சென்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் 

தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad