திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்க்கு பரிசளிப்பு விழா - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 3 July 2024

திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்க்கு பரிசளிப்பு விழா எழுபத்து ஆகனப்பட்டு கன்னார் சமுதாயத்தின் ஸ்ரீ அரங்கநாத பெருமாள் திருமண மண்டபத்தின் சார்பாக  பதினைந்தாம் ஆண்டு பரிசளிப்பு விழாவில் பத்தாவது மற்றும் பிளஸ்டூ அரசு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு  உதவி தொகையும் நினைவுப் பரிசம் நற்சான்றிதழும் வழங்கப்பட்டது.


 மேலும் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கன்னார் சங்கத்தின் சார்பாக பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது மற்றும் கல்வி ஆர்வலர்கள் தங்களுடைய பரிசுகளையும் வழங்கினார்கள் ஸ்ரீ அரங்கநாத பெருமாள் திருமண மண்டப அறக்கட்டளை சார்பாக தலைவர் எம்.அருணாச்சலம் செயலாளர் கே.பழனிச்சாமி பொருளாளர் கே.ஜி.நாகராஜ் கன்னார் சங்கத்தின் சார்பாக தலைவர் எஸ்.பி.அர்ஜுனன் துணைத் தலைவர் எஸ்.கனகராஜ் செயலாளர் என்.இளவரசு துணைச் செயலாளர் கலைமகள்

 பி.நாகராஜன் சங்கப் பொருளாளர் குபேர ஆர்.பி.ராமகிருஷ்ணன் இணை பொருளாளர்  எஸ்.அன்னை குமார் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் மற்றும் சமுதாய நண்பர்களும் கலந்து கொண்டனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad